முகப்பு

  • செய்திகள்

Tuesday, December 10, 2013

முஸ்லிம் மாணவிகள் நிஜாப் அணியத் தடையில்லை -

முஸ்லிம் மாணவிகள் நிஜாப் அணியத் தடையில்லை என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்லாமிய பெண்களின் மரபு ரீதியான ஆடைகளை அணிவதற்கு எவ்வித தடையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாணவிகள் தங்களது முகங்களை மூடிக்கொள்ள எவ்வித தடையும் இல்லை என பிரதி உயர்கல்வி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவிகள் கூட இஸ்லாமிய ஆடைகளை அணியத் தடை விதிக்கப்படவில்லை வும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொரட்டுவை பல்கலைகக்கழகத்தில் மாணவியர் நிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், இந்த விடயம் குறித்து தமக்கு தெரியாது என பிரதி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment