முகப்பு

  • செய்திகள்

Friday, August 21, 2015

ஐமசுமு - தேசிய பட்டியல் விபரம்

ஐமசுமு - தேசிய பட்டியல் விபரம்

01.சரத் அமுனுகம
02.டிலான் பெரேரா
03.விஜித் விஜிதமுனி சொயிசா (தேர்தலில் தோல்வி)
04.எஸ்.பி.திஸாநாயக்க (தேர்தலில் தோல்வி)
05.மஹிந்த சமரசிங்க (தேர்தலில் தோல்வி)
06.லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன (தேர்தலில் தோல்வி)
07.திலங்க சுமதிபால (தேர்தலில் தோல்வி)
08.அங்கஜன் ராமநாதன் (தேர்தலில் தோல்வி)
09.எம்.எல்..எம்.ஹிஸ்புல்லா (தேர்தலில் தோல்வி)
10.மலித் ஜயதிலக
11.பைஸர் முஸ்தபா
12..எச்.எம்.பௌசி

Sunday, January 18, 2015

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது.

பகுதித் தலைவர்களான ஏ,எச்.ஏ, சமட் மற்றும் என்.ஏ, மஜீட் ஆசிரியர்களின் முன்னிலையில் அதிபர்  எம். ஐ. றஸாக் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணியகத்தின் திட்ட இணைப்பாளர் ஏ, றாஸீக் மற்றும் கௌரவ அதிதியாக உதவி அதிபர் யூ. ஆதம்பாவா  அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், தரம் 1 மாணவர்களின் பெற்றார்கள் மற்றும் ஆசிரியர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன





Friday, January 16, 2015

ரவுப் ஹகீம் கடமைகளை பொறுப்பு ஏற்க்கும் நிகழ்வு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளங்கள் வடிகால் அமைப்பு அமைச்சருமான அல் ஹாஜ் ரவுப் ஹகீம் கடமைகளை பொறுப்பு ஏற்க்கும் நிகழ்வு இன்று 16.01.2015 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது,






Thursday, January 15, 2015

தகவல், ஊடகத்துறை புதிய அமைச்சர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய அமைச்சரவையின் தகவல் ஊடகத்துறை அமைச்சராக கயந்த கருணாதிலக (16ஆம் திகதி) இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அமைச்க்கு விஜயம் செய்ய அமைச்சர் கயந்த கருணாதிலக்கை அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதான ,மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரங்கே பண்டார உட்பட அமைச்சர்கள் ,பிரமுகர்கள் ஆகியோருடன் அமைச்சரின் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையானோரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
முன்னாள் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லையும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு புதிய அமைச்சரை வாழ்த்தினார்.


Wednesday, January 14, 2015

தோ்தல் பணிகளில் ஈடுபட்ட அரச ஊழியா்களுக்கான கொடுப்பனவு விபரங்கள்


கடந்த 08ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தலின் போது பணி­களில் ஈடு­பட்ட பணியாட் தொகு­தி­யி­­ருக்கு கொடுப்­பனவு                              வழங்­கப்­­­வுள்­ளது. இதற்­கான சுற்­று­நி­ருபம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்­பி­ரி­­வினால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணை­யாளர் அல்­லது மாவட்ட தெரிவத்­தாட்சி அலுவ­லரின் அறி­வு­றுத்­தல்­­ளுக்­­மைய தேர்தல் கட­மை­களில் ஈடுபட்ட பணியாட் குழு­வி­­ருக்கு கொடுப்­­னவு செய்வதற்கேற்ற­­கையில் 2015/01 இலக்க 2015.01.12 ஆம் திகதிய சுற்று நிருபம் வெளியி­டப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு பணிக்கு­ரிய கட்­டணத் தொகை­களும், அவை வழங்கப்படவேண்டிய முறை பற்­றியும் சுற்­று­நி­ரு­பத்தில் விபரிக்கப்­பட்­டுள்­ளது.
வாக்­கெ­டுப்பு நிலை­­மொன்றில் வாக்­கெ­டுப்பு கட­மையில் ஈடுபட்ட   அலு­­லர்கள் பின்­வரும் ஒழுங்கில் கொடுப்­­னவைப் பெற்றுக் கொள்வர், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர்- 3250 ரூபா, மேல­திக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் 2500 ரூபா, விஷேட கனிஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் 2000 ரூபா, கனிஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் மற்றும் எழு­துனர் 1900 ரூபா, கனிஷ்ட ஊழியர் 1350 ரூபா.

தேர்தல் தினத்­திற்கு முந்­திய தினம் சிரேஷ்ட தலை­மை­தாங்கும்              அலு­­லர்­­ளுக்கு வாக்குப்­பெட்டி மற்றும் வாக்குச் சீட்டு வினியோகம் மற்றும் கையேற்றல் பணி­களில் ஈடு­பட்ட அலுவலர்க­ளுக்கு, உத­வித் தெரிவத்­தாட்சி அலு­வலர் 900 ரூபா, சிரேஷ்ட, கனிஷ்ட தலை­மை­தாங்கும் அலு­வலர் மற்றும்  எழு­துனர் 700 ரூபா, அலு­­லக உத­வி­யாளர் 600 ரூபா.

வாக்­கெண்ணல் கட­மையில் ஈடு­பட்ட அலு­­லர்­­ளுக்கு, உதவித் தெரிவத்­தாட்சி அலு­வலர் 3500 ரூபா, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் 2300 ரூபா, கனிஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் மற்றும் எழு­துனர்             2000 ரூபா, அலு­­லக உத­வி­யாளர் 1250 ரூபா.

முடி­வு­களை வெளியி­டுதல், அட்­­­ணைப்­­டுத்­துதல் பணி­களில் ஈடு­பட்ட அலு­­லர்கள், தலைமை வாக்­கெண்ணும் அலு­வலர் 6250 ரூபா, பிரதி தலைமை வாக்­கெண்ணும் அலு­வலர் 4250 ரூபா, உதவித் தெரிவத்­தாட்சி அலு­வலர் 3500 ரூபா, சிரேஷ்ட           தலை­மை­தாங்கும் அலு­வலர் 2300 ரூபா, கனிஷ்ட   தலை­மை­தாங்கும் அலு­வலர் மற்றும் எழு­துனர் 2000 ரூபா,     அலு­­லக உத­வி­யாளர் 1250 ரூபா.

கொடுப்­­­வுக்கு நிய­மனக் கடிதம் மற்றும் தேர்தல்     ஆணை­யா­­ரினால் அங்கீகரிக்கப்பட்ட அச்சடித்த வரவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். கொடுப்பனவுகள் யாவும் மார்ச் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கிமுடிக்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.