முகப்பு

  • செய்திகள்

Saturday, December 7, 2013

மலாலா யூசாப்சாய்க்கு மனித உரிமைக்கான உயரிய விருது - ஐ. நா. அறிவிப்பு




தாலிபான் தாக்குதலில் உயிர் தப்பிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் மலாலா யூசாப்சாய்க்கு மனித உரிமைக்கான உயரிய விருதை - ஐ.  நா. அறிவித்துள்ளது. ஏற்கனவே இவ்வுயரிய விருது மறைந்த நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலாலா மனித உரிமை மீறலுக்கு எதிராக சிறப்பான பங்களிப்பு கொடுத்தன்பேரில் அவருக்கு இவ்விருதை வழங்க ஐ.நா. முடிவு செய்துள்ளது.



ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இவ்விருது சென்ற முறை அம்னெஸ்ட்டி இண்டர்நேஷ்னல் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கும் ஐ.நா. வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பரிசு மனித உரிமை தொடர்பில் சேவையாற்றியவர்ளுக்கு கவுரவப்படுத்துவதற்காக மட்டும் வழங்கப்படவில்லை என்றும், உலகளவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு தந்து வருவதை சுட்டிக்காட்டுவதற்காகவும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 10-ந்தேதி  மனித உரிமையின் நூற்றாண்டு நாள் விழாவின் போது வழங்கப்படும் என்று தெரிகின்றது.

No comments:

Post a Comment