முகப்பு

  • செய்திகள்

Sunday, January 26, 2014

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மீண்டும் வாக்கர் யூனுஸ்?


பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மீண்டும் வாக்கர் யூனுஸ் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2010-2011ல் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த வாக்கர் யூனுஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் மற்றும் உடல் நிலை காரணமாக பதவி விலகினார். இதனால் ஆஸ்திரேலியாவின் வாட்மோர் பயிற்சியாளர் ஆனார்

இவரது, பதவிக்காலம் முடிந்த நிலையில் ஒப்பந்தத்தை புதுப்பிக்க  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை

இதனால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த நடைபெற உள்ள ஆசிய கோப்பை, 2020 உலக கோப்பை தொடரில் வாக்கர் யூனுஸ் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment