முகப்பு

  • செய்திகள்

Thursday, January 30, 2014

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு நான்கு மாடி கட்டடம்

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சுமார் 400 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  நான்கு மாடி கட்டடம் 29ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.


"விளையாட்டின் தாய் வீடு"- 
(“கிரீடா மஹ கெதர”)  என்ற பெயரிலான இந்த புதிய கட்டட திறப்பு விழாவில், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச். எம்.பவுஸி ,அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத் கமகே, சுசில் பிரேம ஜயந்த ,பந்துல குணவர்த்தன ,டலஸ் அழகப்பெரும , பவித்ரா வன்னியாரச்சி ,ஜகத் பாலசூரிய, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்கிரம மற்றும் பெருந்திரளானோர் கலந்துக் கொண்டனர்.

கொழும்பு குதிரைப்பந்தயத்திடலில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடத் தொகுதியில், 500 ஆசனங்களைக் கொண்ட  நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களும் 
இந்த புதிய கட்டட தொகுதிலேயே இயங்குவிருக்கின்றன.


No comments:

Post a Comment