முகப்பு

  • செய்திகள்

Tuesday, January 13, 2015

இந்த ஆண்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் - கிறிஸ்டியானோ ரொனால்டோ

 சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பானபிபாசார்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸியை (அர்ஜென்டினா) பின்னுக்குத் தள்ளி போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3வது முறையாக உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

180 நாடுகளை சேர்ந்த தேசிய அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில் ரொனால்டோ அதிகபட்சமாக 37.66 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தார். அவர் தொடர்ந்து 2வது முறையாக பிபா தங்க கால்பந்து விருதை தட்டிச் சென்றார். 3வது முறையாக அவர் இந்த விருதை பெறுவது குறிப்பிடத்தக்கது (2008, 2013, 2014). 
இரண்டாவது இடம் பிடித்த லயனல் மெஸ்ஸிக்கு 15.76 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மெஸ்ஸி இந்த விருதை அதிகபட்சமாக 4 முறை வென்று முன்னிலை வகிக்கிறார். சிறந்த வீராங்கனை விருதை ஜெர்மனியின் நடீன் கெஸ்லர் தட்டிச் சென்றார். சிறந்த கோல் அடித்த வீரராக கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகியூஸ் விருது பெற்றார்.


No comments:

Post a Comment